Powered by Blogger.

En Mannava En Mannava Lyrics from Linga

என் மன்னவா மன்னவா
என்னை விட அழகி உண்டு ஆனால்
உன்னை விட உன்னை விடத்
தலைவன் இல்லை ஆமாம்
உன்னை விட உன்னை விடத்
தலைவன் இல்லை
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டாய்
அதி வீரா
உயிரை உயிரால் தொடு வீரா
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே
நூறு யானைகளின்
தந்தம் கொண்டு ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ நான்
பசிகாரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்திவை ராணி
வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
சிற்றின்பம் தாண்டிப்
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல் கொள்ள வா
கொற்றவை மைந்தா
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தேன் இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கி விட்டேன்
அதி வீரா
உயிரை உயிரால் தொடுவீரா

More Linga Lyrics here.

No comments:

Post a Comment