Powered by Blogger.

Kochadaiyaan: Engae Pogudho Vaanam Lyrics

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா

உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்

காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்

வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும்

இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா
வாளில் கூர்மை
வாழ்வில் நேர்மை
இரண்டும் என்றுமே வெல்லும்

எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை

போராடு இளைய சிங்கமே எழுந்து போராடு
வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு – என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்

உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது

Kochadaiyaan: Senthee Vizluntha Song Lyrics

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் … இதயம் உடலில் இருந்து விழுந்து உருண்டு புரண்டு போகுதே நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்… இதயம் கரைகள் மறந்து திசைகள் தொலைந்து அலைந்து போகுதே சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு என் உயிரோ சிறிதே காதலோ பெரிதே பூப்பது மறந்தன கொடிகள் புன்னகை மறந்தது மின்னல் காய்ப்பது மறந்தது காடு காவியம் மறந்தது ஏடு யானோ நின்னை மறக்கிலேன் செந்தமிழ் பிரியும் சங்கம் செங்கடல் பிரியும் அலைகள் ஒலியைப் பிரியும் காற்று உளியைப் பிரியும் சிற்பம் யானோ நின்னைப் பிரிகிலேன் வாய் மொட்டுடைந்தால் பூவாசம் வாசத்துக்கேது சிறைவாசம்