அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
மாதக்கணக்கில் தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்க்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும் விட மாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
தோழன் என நீ தோழும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில் என்னை நீ அடைக்காது
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
No comments:
Post a Comment